பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து கோவை, மதுரை, திருச்சி செல்லும் உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கமான கட்டணத்தை விட 3 மடங்கு அதிகரிப்பு. சென்னை- மதுரை இடையே விமான டிக்கெட் கட்டணம் 5 மடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நாளை (ஜன.14) முதல் (ஜன.17) வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. பல அலுவலகங்களுக்கு இன்றும் சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். பேருந்துகள், காரில் மக்கள் அதிகளவு பயணம் செய்து வருகின்றனர். மேலும் விமானங்களிலும் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகை, தொடர் விடுமுறை எதிரொலியாக தமிழகத்தில் உள்நாட்டு விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. வழக்கமான கட்டணத்தை விட 3 மடங்கு அதிகரிப்பு. சென்னை- மதுரை இடையே விமான டிக்கெட் கட்டணம் 5 மடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் விமானங்களில் டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்துள்ளது. சென்னை-கோவை வழக்கமான கட்டணம் ரூ.3,315 இன்று ரூ.14,689 ஆக உயர்ந்துள்ளது. சென்னை-சேலம் வழக்கமான கட்டணம் ரூ.2,290 இன்று ரூ.11,329 ஆக உயர்ந்துள்ளது.சென்னை - தூத்துக்குடி வழக்கமான கட்டணம்-ரூ.3,624, இன்று-ரூ.13,639. சென்னை-மதுரை வழக்கமான கட்டணம்- ரூ.3,367, இன்று ரூ.17,262 ஆக அதிகரித்துள்ளது. சென்னை-திருச்சி வழக்கமான கட்டணம்- ரூ.2,264, இன்று ரூ.11,369 ஆக அதிகரிக்கப்படுள்ளது.