ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் உதய நாள் விழா துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று கொண்டாடப்பட்டது. துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக விழாவில் கலந்து கொண்டார்.
ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் உதய நாள் விழா துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று கொண்டாடப்பட்டது. துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக விழாவில் கலந்து கொண்டார்.புதுச்சேரியில் வாழ்ந்துவரும் ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களைச் சேரந்த மக்கள் ஹர்சரன் சிங் தலைமையில் திரளாக கொண்டாட்டத்தில் பற்கேற்றனர். லடாக் அரசு சார்பில் ஆசிரியர் தாலிப உசைன் தலைமையில் மாணவர்களின் குழு விழாவில் பங்கேற்றது
துணைநிலை ஆளுநர் இரண்டு யூனியன் பிரதேசங்களைச் சேரந்த பிரதிநிதிகளைக் கௌரவித்தார். அதனைத் தொடரந்து இரண்டு மாநில கலாச்சார நடனம், நாடடுப்புறப் பாடல்கள் நிகழ்த்தப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர்," ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் உதய நாள் இந்தியாவின் இரும்பு மனிதர் வல்லபபாய் பட்டேலின் பிறந்த நாளான தேசிய ஒருமைப்பாட்டு தினத்தோடு ஒத்து செல்கிறது.
நாம் மொழியால், இடத்தால், கலாச்சாரத்தால் வேறுபட்டு இருந்தாலும் இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் நாம் அனைவரும் இந்தியர் என்ற உணர்வைப் பெறுகிறோம். இத்தகைய முன்னெடுப்புக்காக பிரதமர் அவர்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். இதுபோன்ற நிகழ்ச்சிகள் வாயிலாக ஒருவரின் கலாச்சாரத்தை மற்றொருவர் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.