தீபாவளிக்குப் பின்னர் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ஒவ்வொரு கல்வியாண்டிலும் மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெறும்.
இந்தத் தேர்வு முடிவுகள் மே மாதம் இறுதியில் அல்லது ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும். முன்னதாக, பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் கல்வி அமைச்சர் வெளியிடுவார்.
அன்பில் மகேஷ் பேட்டி
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (அக்.31) கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தீபாவளிக்கு பின்னர் பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும்” என்றார்.இது குறித்து அவர், “2023-24 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு அட்டவணை தயார் செய்யும் பணிகள் நடந்துவருகின்றன.
மக்களவை தேர்தல் மற்றும் ஜே.இ.இ. தேர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேர்வு தேதி அறிவிக்கப்படும். இந்த அட்டவணை தீபாவளிக்கு பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.தொடர்ந்து, ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பான கேள்விக்கு, “ஆசிரியர் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்றார். ஆசிரியர் சங்கங்கள் மீண்டும் போராட்டம் நடத்த ஆயத்தமாகிவருகின்றன.