கமல்ஹாசன், ஆக்ரோஷமாக காட்சியளிக்கும் இந்த டைட்டில் டீசரில், அவர் தனது பெயரை ரங்கராய சக்திவேல் நாயக்கன் காயல்பட்டினகாரன் என்று சொல்கிறார்.
/indian-express-tamil/media/media_files/n3r10ykOIdnUGMpzHHZC.jpg)
மணிரத்னம் – கமல்ஹாசன் 2-வது முறையாக இணையும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போ்டர் இன்று வெளியானதை தொடர்ந்து படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் விக்ரம் படத்திற்கு பிறகு தற்போது மணிரத்னம், மற்றும் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதனிடையே கமல்ஹாசனின் பிறந்த நாளை (நவம்பர் 7) முன்னிட்டு இன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. தற்காலிகமாக கமல்ஹாசன் 234 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கமல்ஹாசன், ஆக்ரோஷமாக காட்சியளிக்கும் இந்த டைட்டில் டீசரில், அவர் தனது பெயரை ரங்கராய சக்திவேல் நாயக்கன் காயல்பட்டினகாரன் என்று சொல்கிறார். மேலும் பொறக்கும்போதே என் தலையில எழுதி வச்சிட்டாங்க சக்திவேல் நாயக்கன் ஒரு கிரிமினல் கேங்ஸ்டர் என்று. அப்போது அவரை தாக்க 4 பேர் ஆயுதத்துடன் வருகின்றனர். அவர்களை அடித்து தும்சம் செய்யும் கமல்ஹாசன், இவர்கள் என்னை தாக்க வருவது இது முதல் முறை அல்ல, கடைசி முறையும் அல்ல என்று சொல்கிறார்.
தொடர்ந்து அனைவரையும் அடித்துவிடும் கமல்ஹாசன், என் பேரு ரங்கராய சக்திவேல் நாயக்கன் மறந்துடாதீங்க என்று சொல்கிறார். அத்துடன் இந்த டீசர் முடிவடைகிறது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில், ஜெயம்ரவி, த்ரிஷா மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் நடிக்கின்றனர். படத்திற்கு தங்க் லைஃப் என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் கமல்ஹாசன் – மணிரத்னம் ஏற்கனவே இணைந்த நாயகன் படத்திலும் கமல்ஹாசன் பெயர் சக்திவேல் நாயக்கர்.இதன் மூலம் இந்த தங்க் லைஃப் படம் நாயகன் படத்தின் 2-ம் பாகமாக என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 35 ஆண்டுகளுக்கு பின் கமல் – மணிரத்னம் இணையும் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.