இயக்குனர் நந்தகுமார் 2006-ம் ஆண்டு இயக்கிய படம் ஜாம்பவான். பிரஷாந்த் ஹீரோவாக நடித்த இந்த படத்தில் நிலா, மேக்னா நாயுடு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்
விஜயகாந்தி நடிப்பில் வெளியான தென்னவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் நந்தகுமார். கடந்த 2003-ம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் நந்தகுமார் 2006-ம் ஆண்டு இயக்கிய படம் ஜாம்பவான். பிரஷாந்த் ஹீரோவாக நடித்த இந்த படத்தில் நிலா, மேக்னா நாயுடு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
மேலும் விஜயகுமார், விவேக், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். தமிழ் சினிமாவில் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய அன்பே ஆருயிரே என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நிலா, தனது 2-வது தமிழ் படமாக ஜாம்பவான் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நாயகன் கிராமத்தில் தனது வளர்ப்பு அப்பாவின் பராமரிப்பில் இருப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும்.
இந்த போஷனில் நாயகனை காதலிக்கும் நாயகியாக நடித்திருந்தார். நடிகை நிலா. இந்த படத்தில் ஒரு காட்சி குற்றாலத்தில் படமாக்கப்பட்டது. இதில் நாயகனின் தோட்டத்தில் நாயகி தனது தோழியுடன் குளித்துக்கொண்டிருக்கிறார். அப்போது நாயகன் வந்துவிட, அனைவரும் ஓடி விடுகின்றனர். ஆனால் நாயகி மட்டும் தண்ணீரில் மூழ்கிவிடுகிறார். அப்போது யாரும் இல்லை என்பதை தெரிந்துகொண்ட நாயகன் தண்ணீர் தொட்டியில் இறங்க நாயகி மூச்சை அடக்க முடியாமல் எழுந்திக்கிறார்.
இந்த காட்சி பட்மாக்கப்படும்போது 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தொட்டியில் குற்றாலம் தண்ணீர் பிடித்து படமாக்கியுள்ளனர். குற்றால தண்ணீரை பார்த்த நடிகை நிலா இதில் என்னால் குளிக்க முடியாது என்று கூறியுள்ளார். இதை கேட்ட இயக்குனர் நந்தகுமார் இது குற்றாலத்தில் இருந்து வரும் தண்ணீர். இந்த தண்ணீரில் குளிக்க உலகின் பல இடங்களில் இருந்து வருகிறார்கள் என்று சொல்லியும் நடிகை நிலா என்னால் இதில் குளிக்க முடியாது 12 ஆயிரம் லிட்டர் மினரல் வாட்டர் ரெடி பண்ணுங்க என்று கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அவ்வளவு பட்ஜெட் இல்லை என்று சொல்லியும் நடிகை நிலா கேட்காததால் அன்று ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நடிகை நிலா காரை வரவழைத்து யாரிடமும் சொல்லாமல் டெல்லி போய்யுள்ளார். இதற்காக மதுரை விமான நிலையம் செல்லும்போது தயாரிப்பாளரும் இயக்குனரும் என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக சொல்லிவிட்டு சென்றுள்ளார். இந்த செய்தி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்பிறகு நிலாவின் முதல் பட ஹீரொ எஸ்.ஜே.சூர்யாவிடம் சொல்லி சமாதானம் பேச முயன்றும் முடியவில்லை.
அதன்பிறகு பிரஷாந்தின் அப்பா தியாகராஜன் பேச போனபோது நிலாவின் அப்பா ரவுடிகளை வைத்து மிரட்டியுள்ளார். அதற்கொல்லாம் பயப்படாத அவர், தயாரிப்பாளர் குழுவுடன் அங்கே சென்று பேச ஒரு வாரம் கால்ஷீட் கொடுக்கிறேன் ஆனால் இந்தியாவில் அல்ல வெளிநாட்டில் ஷூட்டிங் வையுங்கள் என்று சொல்ல, குற்றாலத்தில் படமாக்க வேண்டிய காட்சியை பேங்காக்கில் வைத்து படமாக்கினோம் என்று இயக்குனர் நந்தகுமார் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.