பல்வேறு வசதிகளும் தற்போது ஆன்லைனில் உள்ளன. ஆகவே பட்டாவுக்கு வீட்டில் இருந்தே எளிதில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பந்தப்பட்ட நிலத்திற்கு தீர்வை விவரங்கள், ஆவணங்கள் ஆகியவை அவசியம்.
சர்வே எண் என்பது ஆதார் எண் போல் நிலத்துக்கான அடையாள எண் ஆகும். இதனை புல எண் என்றும் கூறுவார்கள். அதேபோல் சிட்டா என்பது கூடுதல் தகவல்கள் கொண்ட ஓர் ஆவணமாகும்.அதாவது பட்டா என்பது நிலத்திற்கான உரிமை ஆவணம். அதேநேரத்தில் சிட்டா என்பது நிலம் குறித்த விவரங்களின் தொகுப்பு ஆகும்.
இந்த நிலையில் பல்வேறு வசதிகளும் தற்போது ஆன்லைனில் உள்ளன. ஆகவே பட்டாவுக்கு வீட்டில் இருந்தே எளிதில் விண்ணப்பிக்கலாம்.இதற்கு சம்பந்தப்பட்ட நிலத்திற்கு தீர்வை விவரங்கள், ஆவணங்கள் ஆகியவை அவசியம் ஆகும். இதற்கு, https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
இதில் பட்டா மாறுதல் வசதியும் உள்ளது. இதற்காக இ-சேவை மையத்திற்கோ அல்லது தாலுகா அலுவலகத்திற்கே செல்ல தேவை இல்லை.இதற்கிடையில் தற்போது ஒரு வாரத்திற்குள் பட்டா மாறுதல் செய்யும் வசதியை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது. இதனால் நிலத்தை வாங்கினாலோ விற்றாலோ ஒரு வாரத்திற்குள் சரியான ஆவணங்கள் இருந்தால் பட்டா வழங்கப்படும்.
இதற்காக பதிவுத்துறையின் ஸ்டார் மென்பொருள் வருவாய் துறையின் தமிழ் நிலம் மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது.