மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலை, வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மழை ஓய்ந்த நிலையிலும் பல இடங்களில் வெள்ள நீர் வடியாமல் இருந்து வருகிறது. மாநகராட்சி நிர்வாகம், காவல் துறை, மீட்பு படையினர் களத்தில் இருந்து மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். மீட்பு நடவடிக்கையும் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், சென்னையைச் சேர்ந்தவருமான அஸ்வின் மிக்ஜாம் புயல் காரணமாக தன்னுடைய பகுதியில் 30 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லை என X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "என்னுடைய பகுதியிலும் 30 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லை.
மற்ற இடங்களிலும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். நமக்கு வேறு வழி என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை எனப்" பதிவிடுள்ளார். X தளத்தில் பயனர் ஒருவர் 30+ மணி நேரத்துக்கு மேலாக வேளச்சேரி பகுதியில் மின்சாரம் இல்லை எனத் தெரிவித்த நிலையில், அதனை ரீ-ட்வீட் செய்த அஸ்வின் இதை தெரிவித்துள்ளார்.