வெள்ளத்தில் மூழ்கிய கார் மற்றும் இருசக்கர வாகனங்களை மெக்கானிக் உதவியுடன் இயக்க வேண்டும் என்று இயந்திர வல்லுநர்கள் அறிவுறித்தி உள்ளனர்.மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் தொடர் மழை பெய்தது. இதனால் சென்னையில் உள்ள பல இடங்கள் தண்ணீரில் மூழ்கின. மழை வெள்ளத்தால் கார்கள், பைக்குகள் அடித்து செல்லப்பட்டது. பல இடங்களில் தண்ணீரில்தான் வாகனங்கள் நின்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் வெள்ளத்தில் மூழ்கிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை மெக்கானிக் உதவியுடன் இயக்க வேண்டும் என்று இயந்திர வல்லுநர்கள் கூறுகின்றனர். காரை எந்த காரணத்திற்காகவும் இயக்க வேண்டாம். அதற்கான மெக்கானிக் உதவியுடன் இயக்க வேண்டும். பெட்ரோல் செலுத்தும் இடத்தில் தண்ணீர் நிரம்பி இருக்க வாய்ப்புள்ளது. வாகனத்திற்குள் தண்ணீர் இருந்தால், நீங்கள் அப்படியே வாகனத்தை இயக்கினால் எஞ்சின் சீஸ் ஆகிவிடும். தண்ணீரை வாகனத்திலிருந்து முழுவதுமாக எடுக்க வேண்டும்.
வாகனத்திற்கு ஏற்ற மெக்கனிக் உதவியுடன் இதை செய்ய வேண்டும். ஒட்டுமொத்தமாக நீரில் மூழ்கிய வாகனத்தில் ஏர் பில்டரில் தண்ணீர் இருக்கும். எலக்ட்ரானிக் சர்க்யூட்டில் தண்ணீர் புகுந்தால், நீங்கள் வண்டியை இயக்கும் போது வாகனம் ஒட்டுமொத்தமாக எரிந்து போவதற்கும் வாய்ப்புள்ளது. . சிறிய முதல் பெரிய கார்கள் வரை எலக்ட்ரானிக் சர்க்யூட் இருக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். மழையால் சேதமடைந்த காரை பழுது பார்க்க ரூ.10 ஆயிரம் முதல் ரூ. 12 ஆயிரம் வரை செலவாகும். அதுபோல இருசக்கர வாகனத்திற்கு ரூ. 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை செலவாகும் என்று இயந்திர வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.