மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ நடிகராகவும் அரசியல்வாதியாகவும் இருக்க அவருக்கு எதிராக இளவரசு அரசியல் செய்து வருகிறார். "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்" படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இன்று பிரம்மாண்டமாக வெளிவந்திருக்கும் "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்" படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
கதைக்களம் :
மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ நடிகராகவும் அரசியல்வாதியாகவும்
இருக்க அவருக்கு எதிராக இளவரசு அரசியல் செய்து வருகிறார். ஷைன் டாம் சாக்கோவின் அரசியல் ராஜ்ஜியத்துக்கு 4 ரவுடிகள் பக்கபலமாக உள்ளனர்.
அவர்களை ஒவ்வொருவராக காலி செய்கின்றனர்.அந்த நால்வரில் ஒருவர் தான் மதுரை கேங்ஸ்டர் லாரன்ஸ். சினிமாவில் மோகம் உள்ள லாரன்சை தூக்க வருகிறார் எஸ்.ஜே.சூர்யா.
அதன்பின் என்னென்ன சுவாரசியங்களும், பரபரப்புகளும் நடக்கின்றன என்பது தான் மீதி கதை.
நடிகர்களின் நடிப்பு
எப்போதுமே குழந்தைகள், குடும்பங்களுக்கு பிடித்த கதாபாத்திரத்தையே தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வரும் லாரன்ஸ் இப்படத்தில் முற்றிலுமாக ஒரு மிரட்டல் தாதாவாக மிரட்டி இருக்கிறார்.
மற்றொருபுறம் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யா தன்னுடைய வழக்கமான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இவர்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள். ஆங்காங்கே வரும் மற்ற கதாபாத்திரங்கள் படத்திற்கு பலம்.
இயக்கம் மற்றும் இசை :
கார்த்திக் சுப்புராஜ் படங்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாலம் இருக்கிறது. அவர்களுக்கு இப்படம் பெரிய ட்ரீட். சந்தோஷ் நாராயணன் இசை இப்படத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்று இருக்கிறது. படத்தின் பிஜிஎம் மற்றும் பாடல்கள் என அனைத்துமே வேற ரகம்.
படம் எப்படி :
கதை களத்திற்குள் ரசிகர்களைக் கொண்டு செல்ல முதல் பாதியில் சற்று நேரம் எடுத்திருக்கிறார் இயக்குனர். படம் எப்போது சூடு பிடிக்கும் என ரசிகர்களின் மனநிலையை இடைவேளைக்கு முன்னர் புரிந்து கொண்ட இயக்குனர் அதன் பிறகு கதைக்களத்தை ஜெட் வேகத்தில் பயணிக்க வைக்கிறார்.
அவர் சொல்ல முற்பட்டிருக்கும் சமூக கருத்திற்கு மிகப்பெரிய பாராட்டுக்கள். ஒரு சினிமாவால் ஒரு அரசியலையே மாற்ற முடியும் என்பதை இப்படத்தின் ஆணிவேராக அவர் சொல்லியிருக்கும் விதம் புதுமை.
சில இடங்களில் லாஜிக் ஓட்டைகள் தென்பட்டாலும் அது பெரிதாக படத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. மொத்தத்தில் மக்கள் கொண்டாட கூடிய ஒரு சூப்பர் படமாக இந்த தீபாவளிக்கு "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்" அமைந்துள்ளது.