இந்த முறை வடகிழக்கில் தொடங்கி மேற்கு மாநிலங்களுக்குப் பயணம் செய்கிறார், இது 2024 மக்களவைத் தேர்தலுக்கான அவரது பிரச்சாரத்தின் ஒருபகுதியாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜனவரி 14ஆம் தேதி முதல் மார்ச் 28 வரை மற்றொரு யாத்திரையைத் தொடங்க உள்ளார்.இந்த முறை வடகிழக்கில் தொடங்கி மேற்கு மாநிலங்களுக்குப் பயணம் செய்கிறார், இது 2024 மக்களவைத் தேர்தலுக்கான அவரது பிரச்சாரத்தின் ஒருபகுதி ஆகும்.
இதனை காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். இது குறித்து அவர், “காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், கிழக்கு-மேற்கு யாத்திரையை ராகுல் காந்தி தொடங்குகிறார்.காங்கிரஸ் கட்சியின் நிர்வாக குழு கூட்டத்துக்கு மதிப்பளித்து ராகுல் காந்தி இந்த யாத்திரையை தொடங்குகிறார். ஜனவரி 14-ம் தேதி மணிப்பூரில் இருந்து தனது யாத்திரையை தொடங்கி மும்பையில் முடிக்கிறார். இது பாரத நியாய யாத்ரா என்று அழைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் ஜம்மு காஷ்மீர் வரை ஏற்கனவே பாரத் ஜோடோ யாத்திரை என்ற பயணத்தை முடித்துள்ளார்.இந்த நிலையில் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இருந்து புதிய யாத்திரை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.