மழை மற்றும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை மறுநாள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி செல்கிறார். வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 17, 18ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத அதி கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. தூத்துக்குடியில் இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடியவில்லை.
மழை பாதிப்பில் இருந்து நெல்லை தற்போது மீண்டு வருகிறது. தூத்துக்குடியில் இன்னும் மக்கள் வெள்ள நிவாரண முகாம்களில் உள்ளனர். பல்வேறு சாலைகளும் சேதமடைந்துள்ளது.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் தூத்துக்குடி செல்கிறார். சென்னை மழை பாதிப்பை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்ட நிலையில், தூத்துக்குடிக்கு நிர்மலா சீதாராமனம் பயணம் செய்ய உள்ளார்.