பள்ளிகளில் உள்ள சாதி பாகுபாடு குறித்த ஆய்வில், அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது.பள்ளிகளில் நிலவும் சாதி பாகுபாடு குறித்து, தமிழகத்தில் உள்ள 36 மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் மாணவர்களிடம் 78 கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த ஆய்வானது 321 அரசுப் பள்ளிகள், 58 அரசு உதவிபெறும் பள்ளிகள், 62 தனியார் பள்ளிகள் நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான பள்ளிகளில்தான் அதிகம் சாதி பாகுபாடு கடைபிடிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 13 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் சாதி பெருமை தொடர்பான பேச்சுகளில் ஈடுபடுவதாகவும், சாதி சார்ந்து பேசுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இந்த ஆய்வை நடத்தி உள்ளது. இந்த ஆய்வின் தகவல்களும், இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான பரிந்துரைகளை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழக முதல்வரிடம் சமர்பித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில செயலாளர் சமுவேல் ராஜ் கூறுகையில், “ இந்த ஆய்வு மூலம் 25 பள்ளிகளில் மாணவர்களிடம் உள்ள சாதி மோதல்கள் குறித்து பள்ளி நிர்வாகத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் பேருந்தில் பயணக்கும்போது, தீண்டாமை கொடுமைகளை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
வட சென்னையில் உள்ள பள்ளிகளில், மாணவர்கள் சாதி சார்ந்த கிண்டல், தகாத வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். மேலும் குறிப்பிட்ட சாதி தொடர்பாக தவறாக பேசுகின்றனர்.35 பள்ளிகளில், தங்கள் சாதியை குறிக்கு, கயிறு, பொட்டு, புகைப்படங்களை மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். 6 மாவட்டங்களில் உள்ள மாணவிகள் வகுப்பறையில் மிராட்டப்படுவதாகவும், பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக தெரிவித்துள்ளனர்.
3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவிகள் பாலியல் ரீதியாக பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். பள்ளி ஆசிரியர்களிடம், ஊழியர்களிடம் சாதி பாகுபாடு நிலவுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும் வழிமுறைகளை அரசு அறிவிக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பள்ளியின் பெயர்கள் வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார். இந்த செய்தி இந்து ஆங்கிலத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.