உலக நாயகன் கமலஹாசனின் இளைய மகளான அக்ஷரா ஹாசன், மும்பையில் பல கோடி மதிப்பில் புதிய ஃபிளாட் ஒன்றை வாங்கி உள்ள தகவல் வெளியாகி உள்ளது. உலக நாயகன் கமலஹாசன் போலவே, இவருடைய இரண்டு மகள்களும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஸ்ருதிஹாசன் இசை மற்றும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில், அவருடைய தங்கையான அக்ஷாரா ஹாசன் திரைப்பட இயக்கம் மற்றும் நடிப்பில் ஆர்வம் காட்டி.
இவர் படித்து முடித்ததும் பல படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ளாமல், இயக்குனர் மணிரத்னத்தின் கடல், மற்றும் தன்னுடையை தந்தையின் சபாஷ் நாயுடு ஆகிய படங்களில் துணை இயக்குனராக பணியாற்றினார். இதை தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு, தனுஷ் - அமிதாப்பச்சன் நடிப்பில் ஹிந்தியில் வெளியான ஷமிதாப் என்கிற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
மும்பையில் 15 மாடி கட்டிடம் கொண்ட அப்பார்ட்மெண்டில், 13 ஆவது மாடியில் சுமார் 15 .75 கோடிக்கு அக்ஷாரா இந்த வீட்டை, ஒரு இளம் ஜோடிகளிடம் இருந்து வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. 2245 சதுர அடி கொண்ட இந்த வீட்டில், மூன்று கார்கள் நிறுத்தும் வசதிகள் இருப்பதாகவும், வீடு முழுவதும் ரிமோட் கண்ட்ரோலால் இயங்கக்கூடிய அதிநவீன முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பாலிவுட் பிரபலங்கள் பலர் வாழும் பாந்தரா பகுதியில் இந்த வீடு அமைந்துள்ள நிலையில், புதிய வீடு வாங்கியதற்காக அக்ஷராவுக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.