மும்பையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறைக்கு வந்த புரளி அழைப்பு; இருப்பினும் மும்பை போலீசாரை உஷார்படுத்திய தமிழக காவல்துறை.
வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறியவர் உடனே தொடர்பை துண்டித்துவிட்டார்.தொலைப்பேசியில் பேசியவர் தெளிவற்ற தகவலைக் கொடுத்தாலும், தமிழ்நாடு காவல்துறை மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தது.
முதற்கட்ட விசாரணையில் அந்த மிரட்டல் அழைப்பு புரளி என தெரியவந்தது, இருப்பினும் இரு மாநில போலீசாரும் தொலைப்பேசியில் பேசியவரைக் கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர்.