தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தி.மு.க ஃபைல்ஸ் என்ற பெயரில் தி.மு.க முக்கிய தலைவர்கள் ஊழல் செய்ததாகக் கூறி சில தகவல்களை வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே 2 திமுக ஃபைல்ஸ்கள் வெளியான நிலையில், தற்போது 3 ஆவது ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
இந்தநிலையில், வேலூரில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிடப்போவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், வெளியிடட்டும், வேணாம் என யாரு கைய புடிச்சு வச்சுருக்கா, வெளியிடட்டும் என சிரித்தவாறே கூறினார்.
மேலும், நாடாளுமன்ற தேர்தல் குறித்த கேள்விக்கு, எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க தயாராக உள்ளது. கூட்டணி கட்சிகளோடு இணைந்து தி.மு.க தேர்தலைச் சந்திக்கும் என்று துரைமுருகன் கூறினார்.