இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் உள்நாட்டு குறியீடுகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி 50 செவ்வாய்க்கிழமை (நவ.21) வர்த்தகத்தை உயர்வில் நிறைவு செய்தன. இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செவ்வாய்க்கிழமை (நவ.21) வர்த்தக அமர்வை உயர்வில் முடித்தது.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 89 புள்ளிகள் அல்லது 0.45% அதிகரித்து 19,783.40 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 275.63 புள்ளிகள் அல்லது 0.42% அதிகரித்து 65,930.78 ஆகவும் இருந்தது.ரியாலிட்டி மற்றும் மெட்டல் பங்குகள் லாபத்துடன், பரந்த குறியீடுகள் பெரும்பாலும் உயர்வில் முடிந்தன. பேங்க் நிஃப்டி குறியீடு 104.20 புள்ளிகள் அல்லது 0.24% அதிகரித்து 43,689.15 புள்ளிகளில் நிலைத்தது.
மற்ற துறை குறியீடுகளில் ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகள் லாபம் பெற்றன. அதே சமயம் FMCG மற்றும் IT பங்குகள் வீழ்ச்சியடைந்தன.எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் ஆகியவை என்எஸ்இ நிஃப்டி 50-ல் அதிக லாபம் ஈட்டின.பிபிசிஎல், டெக் மஹிந்திரா, எல்டி மைண்ட்ட்ரீ, என்டிபிசி மற்றும் எல்&டி ஆகியவை பின்தங்கி உள்ளன. இந்திய ஏற்ற இறக்கம் குறியீடு (இந்தியா VIX) 0.69% குறைந்தது.
52 வார உயர்வு:Oberoi Realty, Max Finance, Godrej Properties, Alkem labs, DLF ஆகியவை 52 வார உச்சத்தில் வர்த்தகமான டாப் பங்குகளாகும்.
என்எஸ்இயில் நஷ்டம் அடைந்த பங்குகள்:என்டிபிசி, பிபிசிஎல், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், கோல் இந்தியா மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை என்எஸ்இ நிஃப்டி 50ல் முதலிடத்தில் காணப்பட்டன.