ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை கேப்ரியல்லா சார்ல்டன் தற்போது தனது குடும்பத்துடன் லண்டனில் சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.2009-ல் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை கேப்ரியல்லா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார். அதற்கு முன்பே தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கேப்ரியல்லா, அடுத்து சென்னையில் ஒருநாள் மற்றும் அப்பா படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து 2020-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் பங்கேற்ற கேப்ரியல்லா, நிகழ்ச்சி முடிந்த பின் 7சி என்ற தொடரில் நடித்தார். அதன்பிறகு விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் நாயகியாக நடித்திருந்தார். சாந்தினி பிரகாஷ், ஷ்ரவ்னிதா, தசரதி, மீனா வேமுரி, மனோகர் கிருஷ்ணன், தருண் அப்பாசாமி, தீபக் குமார் மற்றும் தினேஷ் கோபால்சாமி என பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த சீரியலில் நடித்திருந்தனர்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நான் ஒருபோதும், நான் இங்கிலாந்துக்கு செல்வதாக கனவு கண்டதில்லை, என் நண்பர்களைச் சந்திக்கவும் நகரங்களை பற்றி தெரிந்துகொள்ளவும், தனிமையை அனுபவிக்கவும், என்னைச் சுற்றி அமைந்துள்ள அனைத்திற்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். நகரின் மையத்தில் ஒரு மகிழ்ச்சியான டின்னர் உட்பட நடிகை தனது விடுமுறை தினத்தை குடும்பதுடன் கொண்டாடி வரும் தருணங்களைப் பகிர்ந்து கொண்டார்,