இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 55 ரன்னில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது. ஓப்பனர்களாக ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் ஏழு பந்துகளை சந்தித்த நிலையில் ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் ஆகி நடையை கட்டினார்.
கேப்டன் ரோஹித் சர்மா 50 பந்துகளில் ஏழு பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்தது அவுட் ஆனார். அடுத்து சும்மன் கீழ் 36 ரன்களும் விராட் கோலி 46 ரன்களும் எடுத்திருந்தனர்.இந்திய அணி 110 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்ரேயாஸ் அய்யர் அவுட் ஆனார். அடுத்து 153 வது ரன்னில் ஐந்தாவது விக்கெட்டாக கேஎல் ராகுல் வீழ்ந்தார். அப்போது அவர் எட்டு ரன்கள் எடுத்திருந்தார்.
அதன்பின்னர் ரவீந்திர ஜடேஜா, ஜாஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தொடர்ச்சியாக ரன்கள் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகிறார்கள்.இதனால் இந்திய அணி 153 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முகேஷ் குமார் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் நின்றார். அதாவது 153 என்ற ஒரே ஸ்கோரில் ஆறு விக்கெட்டுகளை தொடர்ச்சியாக இழந்தது.
இது ஒரு மோசமான உலக சாதனையாக பார்க்கப்படுகிறது.தற்போது தென் ஆப்பிரிக்க அணி 62 ரன்னுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்திய அணியை விட 36 ரன்கள் பின் தங்கி உள்ளது.இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் இரண்டு விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார், தென்னாப்பிரிக்கா முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது.