மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் வருகின்ற 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை டெல்லியில் உள்ள பாரத் மண்டபம், யஷோபூமியில் இக்கண்காட்சி நடைபெறுகிறது.
மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் 11 ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்களின் கூட்டமைப்பால் வருகின்ற 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை டெல்லியில் உள்ள பாரத் மண்டபம், யஷோபூமியில் இக்கண்காட்சி நடைபெறுகிறது.
இந்த நிலையில், கோயம்புத்துார், ஹோட்டல் லீ மெரிடியனில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ரோட்ஷோ ஒரு காட்சி மற்றும் கலாச்சார விருந்தாக அமைந்தது. இந்த நிகழ்வு இந்தியாவின் ஜவுளி பாரம்பரியத்தின் செழுமையையும், பன்முகத்தன்மையையும், தமிழகத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது. அப்போது, தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் காந்தி, “நமது மாநிலத்தின் திரைச்சீலைகள், கைவினைத்திறனின் மிகச் சிறந்த இழைகளால் பின்னப்பட்டவை. தலைமுறை தலைமுறையாக உள்ள உற்பத்தி முறை மற்றும் கலைத்திறன் ஆகியவற்றின் கதையுடன் எதிரொலிக்கின்றன” என்றார்.
மத்திய ஜவுளித்துறையின் இணைச் செயலாளர், ராஜீவ் சக்ஸேனா, இந்தியாவின் மிகப்பெரிய ஜவுளிக் கண்காட்சியை நோக்கிய பயணத்தை இந்த உற்சாகமான ரோட்ஷோவுடன் முதன் முதலில் கோவையில் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
நமது ஜவுளித்துறையின் திறமையை உலக அரங்கில் வெளிப்படுத்த ஜவுளி ஏற்றுமதி அபிவிருத்தி கழகங்கள் மற்றும் மத்திய ஜவுளித்துறையின் கூட்டு முயற்சிகளுக்கு இது ஒரு சான்றாகும்.
பாரத் டெக்ஸ் 2024, நமது இந்திய கைவினைத்திறனின் சிம்பொனியை பிரதிபலிக்கும், கைத்தறி மூலம் நமது கைவினைஞர்கள் மற்றும் ஜவுளி பாரம்பரியத்தின் வலிமை மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்துகிறது.இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க ஒன்றாக உருவெடுத்துள்ளது. இது பல்வேறு வகையான கண்காட்சி தளத்திற்கு கொண்டு வரும் மற்றும் தொழில்துறையின் வலிமையை வெளிப்படுத்தும் என்று திடமாக நம்புகிறோம்” என்றார்.