பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு; சம்பவத்தின் பின்னணியில் உள்ள அமைப்புகள் மற்றும் அவர்களின் நோக்கங்களை அறிந்து கொள்வது அவசியம்; பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் டிசம்பர் 13-ம் தேதி நடந்த பாதுகாப்புக் குறைபாடு "வருத்தமானது மற்றும் கவலையளிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள அமைப்புகள் மற்றும் அவர்களின் நோக்கங்களை அறிந்து கொள்வது அவசியம் என்றும் கூறினார்.
இந்தி செய்தி நாளிதழான டைனிக் ஜாக்ரானிடம் பேசிய பிரதமர் மோடி, “பாராளுமன்றத்தில் நடந்த சம்பவத்தின் தீவிரத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. எனவே, சபாநாயகர் முழு தீவிரத்துடன் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக விசாரித்து வருகின்றன. இதற்குப் பின்னால் உள்ள அமைப்புகள் மற்றும் நோக்கங்கள் என்ன என்பதை அறிந்துக் கொள்வதும் சமமாக முக்கியமானது,” என்று கூறினார்."விஷயத்தின் ஆழத்திற்குச் செல்ல வேண்டியது அவசியம், அதனால் தீர்வு காண முடியும்" என்று கூறிய பிரதமர், "அது தொடர்பாக சண்டையிடுவது அல்லது எதிர்ப்பு தெரிவிப்பது தவிர்க்கப்பட வேண்டும்" என்றும் கூறினார்.
டிசம்பர் 13ஆம் தேதியன்று, இரண்டு பேர், புகைக் குப்பிகளை ஏந்தி, பார்வையாளர்கள் கேலரியில் இருந்து, மக்களவையின் அறைக்குள் குதித்த, பாதுகாப்பு மீறல் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர், அமித்ஷாவின் அறிக்கையை, எதிர்க்கட்சிகள் கோருகின்றன. இருவருமே ‘சர்வாதிகாரம் ஏற்றுக்கொள்ளப்படாது’ போன்ற முழக்கங்களை எழுப்பினர்.அத்துமீறியவர்கள் இறுதியில் மக்களவை உறுப்பினர்கள் மற்றும் சபை ஊழியர்களால் தடுத்து பிடிக்கப்பட்டனர். அதே நேரத்தில் மேலும் இருவர் பாராளுமன்ற வளாகத்திற்கு வெளியே கோஷங்களை எழுப்பியவாறு குப்பிகளில் இருந்து வண்ண புகையை வெளியேற்றினர்.
சந்தேக நபர்கள் வேலை கிடைக்காததால் விரக்தியில் இருந்ததாக அவர்களின் குடும்பங்கள் கூறுகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.டிசம்பர் 13, 2001 அன்று, ஒன்பது பேர் கொல்லப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தின் மீதான தாக்குதலுக்கு சரியாக 22 ஆண்டுகளுக்குப் பிறகு பாராளுமன்றத்திற்குள் பாதுகாப்பு மீறல் ஏற்பட்டது.