முதலில் பேரிடர் இல்லை என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார் என்றும் தற்போது பேரிடர் பாதிப்பை பார்வையிட்ட பிறகு தேவையான நிதியை வழங்குவார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலில் பேரிடர் இல்லை என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார் என்றும் தற்போது பேரிடர் பாதிப்பை பார்வையிட்ட பிறகு தேவையான நிதியை வழங்குவார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 11 குடும்பங்களுக்கு முதல்கட்டமாக 5 லட்சம் வரை நிவாரண பொருட்களை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது ” திநெல்வேலி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்து எடுக்கப்பட்ட சர்வேயில், பாதிக்கப்பட்ட 11 குடும்பகளுக்கு ரூ. 5 லட்சம் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடை இழந்தவர்கள், வீடு இழந்தவர்கள் தொடர்பாகவும் சர்வே எடுக்கப்பட்டுள்ளது. விரைவாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும். நிவாரண பொருட்களை வழங்கும் பணியைதான் முதலமைச்சர் உள்பட மற்ற எல்லா அமைச்சர்களு,ம் செய்து வருகின்றனர். மத்திய அரசையும் உதவி செய்ய வேண்டும் என்றுதான் கேட்டுக்கொண்டுள்ளோம்.
இதில் அவர்கள் அரசியல் செய்ய நினைக்கிறார்கள். நிர்மலா சீதாராமன் முதலில் இதை பேரிடர் இல்லை என்றார். தற்போது பார்வையிட வருகிறார். ஒன்றிய அமைச்சர் பார்வையிட்ட பிறகு இதை பேரிடர் என்று ஏற்றுக்கொள்வார். மேலும் அதற்கான நிதியை வழங்வார். மேலும் முதலமைச்சரிடம் பிரதமர் தொலைபேசியில் பேசி உள்ளார். பேருந்து செல்ல முடியாத, மாஞ்சோலை பகுதியில், வேன் மூலம் மக்கள் இலவசமாக அழைத்து வரப்படுவார்கள்.” என்று அவர் கூறினார்.