சமூகத்தில் ஆழமாக வேரூன்றி இருந்த சமூக நடைமுறைகளை ஒழிப்பதற்கு ஆண்கள் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள பல பெண் தலைவர்களும் போராடியுள்ளனர். 75வது குடியரசு தின கொண்டாட்டத்தில் சமூக சீர்த்திருத்தத்திற்கு வித்திட்ட சில பெண் தலைவர்கள் குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம். தன்னுடைய வாழ்க்கையை பெண் உரிமைக்கான அர்ப்பணித்த தலைவர்களில் ஒருவராக உள்ளார் மூவலூர் ராமாமிர்தம். திருவாரூரில் பிறந்திருந்தாலும் மூவலூரில் தான் வளர்ந்தார். இளம் வயதில் இருந்தே சமூக பிரச்சனைகளைக் குறித்து கேள்வி எழுப்பிய இவர், தேவசாசி முறையை ஒழிக்க முத்துலெட்சுமி ரெட்டி மேற்கொண்ட முயற்சிக்கு உதவியாக இருந்தார் மூவலூர் ராமாமிர்தம். கடந்த 1937 - 1940 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று, 6 வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரது தொடர்ச்சியான போராட்டம் மற்றும் விழிப்புணர்வினால் 1947 ல் தேவசாசி ஒழிப்பு மசோதாவை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வாழ்நாள் முழுவதும் பெண்களின் உரிமைகளுக்காக போராடிய இவரின் பெருமைகளை நினைவு கூரும் விதமாக தமிழக அரசின் திருமணத் தொகை மூவலூர் இராமமிர்தம் பெயரில் நடைபெற்றது. தற்போது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளியில் பயிலக்கூடிய 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டுவருகிறது.கடலூர் மாவட்டம் முதுநகரையில் கடந்த 1890ல் பிறந்தார் அஞ்சலையம்மாள். தென்னகத்தின் ராணி என்ற அழைக்கப்படும் அஞ்சலை அம்மாளுக்கு கல்வி அறிவோ 5 ஆம் வகுப்பு வரை மட்டும் தான். ஆனாலும் சிறு வயதில் இருந்தே சமூகப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். ஒத்துழையாமை இயக்க போராட்டம், சிலை அகற்றும் போராட்டத்தில் பங்கேற்று, தனது குழந்தையுடன் சிறை சென்றவர் அஞ்சலையம்மாள். தன்னுடைய நிலங்களை விற்று, அந்த பணத்தின் உதவியோடு சமூக நீதிக்காகவும், சுதந்திரத்திற்காகவும் போராடிய பெருமைக் கொண்டவர் இந்த அஞ்சலையம்மாள்.
நாடு சுதந்திரம் பெற்றால் மட்டுமே என்னுடைய திருமணம் என்பதில் உறுதியாக இருந்தார் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் ஜெகநாதன். ஏழ்மையான குடும்ப சூழலிலும் தன்னுடைய பள்ளி மற்றும் பட்டப்படிப்பை முடித்த பெருமைக்குரியவர். மதுரையில் பட்டம் பயின்ற முதல் பெண் என்ற பெருமையும் உள்ளது. சுதந்திர போராட்டத்திலும் ஏழை, எளிய மக்களுக்கு கல்வி தான் பிரதானம் என்பதை முன்னிறுத்தி சென்றார். நாடு சுதந்திரம் பெற்ற பின்னதாக திருமணம் செய்து கொண்ட இவர், தன்னுடைய கணவருடன் இணைந்து ஏழை, எளிய மக்களின் கல்வி, நலன் மற்றும் நிலமற்றவர்களின் உரிமைக்காகப் போராடினார்.இவர்கள் மட்டுமல்ல டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, எஸ்.என். சுந்தரம்மாள், அம்புஜத்தம்மாள் போன்ற பல பெண் தலைவர்களும் நாட்டின் சுதந்திரம் மற்றும் சமூகசீர்த்திருத்தம், பெண்களின் முன்னேற்றத்திற்காக போராடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.