பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக வாரணாசிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தார். அங்கு அவர், 19,000 கோடி ரூபாய் மதிப்பிலான 37 திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். காசி-தமிழ் சங்கமத்தின் போது பிரதமர் மோடியின் உரையை மொழிபெயர்க்க AI கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது. பாஷினி என்றால் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வாரணாசி நமோ காட் என்ற இடத்தில் காசி தமிழ் சங்கமம் 2.0 ஐ தொடங்கிவைத்தார். தொடர்ந்து, கன்னியாகுமரி மற்றும் வாரணாசி இடையே காசி தமிழ் சங்கமம் விரைவு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். காசி தமிழ் சங்கமத்தில் அவர் ஆற்றிய உரையின் போது, புதிய நிகழ்நேர செயற்கை நுண்ணறிவு (AI)-அடிப்படையிலான ‘பாஷினி’ என்ற மொழிபெயர்ப்புக் கருவியானது, தமிழ்ப் புரிந்துகொள்ளும் பார்வையாளர்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது.
“இந்த AI தொழில்நுட்பத்தை நாங்கள் முதன்முறையாகப் பயன்படுத்துகிறோம்” என்று கூறிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் இயர்போனைப் பயன்படுத்தி தனது பேச்சைக் கேட்குமாறு வலியுறுத்தினார். “இன்று, செயற்கை நுண்ணறிவு மூலம் புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாடு இங்கு நடந்துள்ளது. இது ஒரு புதிய ஆரம்பம் மற்றும் நான் உங்களை அணுகுவதை எளிதாக்குகிறது என்று நம்புகிறேன்,” என்றார்.
'பாஷினி' என்பது AI- அடிப்படையிலான மொழி மொழிபெயர்ப்பு அமைப்பாகும், இது மற்ற இந்திய மொழிகளைப் பேசுபவர்களுடன் பேசும் போது, அந்த மொழியைப் புரியாதவர்களுடன் பேசும் போதும் அவர்களின் சொந்த மொழியில் பேச உதவுகிறது. இது, ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயன்பாடுகள் வழியாக அணுகக்கூடியது.பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக வாரணாசிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தார். அங்கு அவர், 19,000 கோடி ரூபாய் மதிப்பிலான 37 திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.