திருநெல்வேலி ஜங்ஷன் உள்ளிட்ட இடங்கள் மழை நீரில் மிதக்கின்றன. இந்த நிலையில் இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி செல்லும் மு.க. ஸ்டாலின் பிரதமரின் நேரம் கேட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தென்மாவட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து பேச மு.க. ஸ்டாலின் பிரதமரின் நேரம் கேட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு காணப்படுகிறது.

இதற்கிடையில் திருநெல்வேலியில் முக்கிய அணைகளில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஜீவநதியான தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.திருநெல்வேலி ஜங்ஷன் உள்ளிட்ட இடங்கள் மழை நீரில் மிதக்கின்றன. இந்த நிலையில் இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி செல்லும் மு.க. ஸ்டாலின் பிரதமரின் நேரம் கேட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில், “சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்கக் கோரியும், தற்போது தென்மாவட்டங்களில் பெய்துவரும் அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடு்துக் கூறி ஆலோசிக்கவும் நாளை (டிச.19) பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க மு.க. ஸ்டாலின் நேரம் ஒதுக்கக் கோரி கடிதம் எழுதியுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.