திருப்பூரில் வரும் 19-ம் தேதி நடைபெறவிருந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பிரதமர் மோடியின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில் வேல் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது
திருப்பூரில் வரும் 19-ம் தேதி பாஜக சார்பில் பொதுக் கூட்டம் நடைபற உள்ளதாகவும், இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக 6 இடங்கைளத் தேர்வு செய்யும் பணி நடைபற்று வந்தது. இந்நிலையில், சில நிர்வாகக் காரணங்களால் பிரதமர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் பங்கேற்க உள்ள பொதுக்கூட்டம் தொடர்பான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சில நிர்வாகக் காரணங்களால் பிரதமர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் பங்கேற்க உள்ள பொதுக்கூட்டம் தொடர்பான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில் வேல் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது