புரோ கபடி லீக் தொடரின் 10-வது சீசன் நேற்று தொடங்கிய நிலையில், போட்டியின் 2-வது நாளான இன்று தமிழ் தலைவாஸ் அணி தபாங் டெல்லி கே.சி. அணியை எதிர்கோள்கிறது.கபடி வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவில் ப்ரோ கபடி லீக் போட்டி தொடங்கியது. இதுவரை 9 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், பாட்னா அணி 3 முறையும், ஜெய்பூர் அணி 2 முறையும், மும்பை பெங்கால், பெங்களூர், டெல்லி ஆகிய அணிகள் தலா ஒருமுறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் விளையாடி வரும் தமிழ் தலைவாஸ் அணி கடந்த சீசனில் 4-வது இடத்தை பிடித்திருந்தது.
இதனிடையே ப்ரோ கபடி லீக் தொடரின் 10-வது சீசன் நேற்று (டிசம்பர் 2) தொடங்கியது. இதில் முதல் போட்டியில் யு மும்பா அணி 34-31 என்ற கணக்கில் யுபி யோத்தாஸ் அணியை வீழ்த்தியது. தொடர்ந்து 2-வது நாளான இன்று 2 போட்டிகள் நடைபெற்ற உள்ளது. இதில் இரவு 8 மணிக்கு நடக்கும் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி – தபாங் டெல்லி அணியுடன் மோதியது.
தமிழ் தலைவாஸ் – தபாங் டெல்லி
தமிழ் தலைவாஸ் – தபாங் டெல்லி அணி இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், 5 முறை டெல்லி அணியும், ஒருமுறை தமிழ் தலைவாஸ் அணியும் வெற்றி பெற்றுள்ள நிலையில், 2 போட்டிகள் சமநிலையில் முடிந்தது. இன்று 9-வது முறையாக இரு அணிகளும் மோத உள்ள நிலையில், 2023-ம் ஆண்டு முதல் ஆட்டத்தில் விளையாடும் தமிழ் தலைவாஸ் வெற்றியுடன் தொடங்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்தது.
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக விளையாடிய சாஹர் ராதே தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி 42-31 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. தமிழக அணி தரப்பில் அஜாக்யா பவர் 14 ரைடு, 2 டிக்கீ, 5 போனஸ் புள்ளிகளுடன் 21 புள்ளிகள் எடுத்துள்ளார். நரேந்தர் ஹாஷியர் 8 புள்ளிகளும், அபிஷேக், ஹம்மன்சூ, ஷாஹில் சிங், ஆகியோர் தலா 2 புள்ளிகள் எடுத்தனர்.