தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் 2023 டிசம்பரில் காலமானார்.இவரின் மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள்- நடிகைகள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர்கள் சரத் குமார், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், ராகவா லாரன்ஸ், ஆர்யா, விஷால் உள்ளிட்ட நடிகர்கள் அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்தனர்.
அஜித் குமார் நேரிலோ விஜயகாந்த் நினைவிடத்திலோ இதுவரை அஞ்சலி செலுத்தவில்லை; விஜயகாந்த் குடும்பத்தினரிடம் போனில் ஆறுதல் தெரிவித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.இந்த நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) கேப்டன் விஜயகாந்தின் இரங்கல் கூட்டம் நடக்கிறது. இதில் கலந்துகொள்ள நாசர் அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்திலும் முன்னணி நடிகர்கள்- நடிகைகள் கலந்துகொள்வார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நடிகர் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோதுதான் சங்கத்தின் கடன்கள் அடைக்கப்பட்டன. விஜயகாந்துக்கு பிறகு அவரது நெருங்கிய நண்பர்களான சரத் குமாரும், ராதாரவியும் சங்கத் தேர்தலில் போட்டியிட்டனர்.இந்தக் கூட்டணியை எதிர்த்துதான் விஷால், நாசர், கார்த்தி, பூச்சி முருகன் கூட்டணி வெற்றி பெற்றது நினைவுக் கூரத்தக்கது.