ஜனவரி 22, 2024 அன்று மதியம் 12:20 மணிக்கு, ராமர் சிலையின் ‘பிரான் பிரதிஷ்டா’ நடைபெறுகிறது. இந்தப் பிரதிஷ்டை விழாவில் 8 ஆயிரம் சிறப்பு விருந்தாளிகள் கலந்துகொள்ள உள்ளனர். யோத்தியில் ராமர் சிலை கும்பாபிஷேக விழா நெருங்கி வரும் நிலையில், பிரம்மாண்ட நிகழ்வுக்கு தயாராகும் வகையில் அலங்கரிக்கப்பட்ட கோவிலின் வசீகரமான இரவு நேரப் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
ஜனவரி 22, 2024 அன்று மதியம் 12:20 மணிக்கு, ராமர் சிலையின் ‘பிரான் பிரதிஷ்டா’ எனப்படும் பிரதிஷ்டை விழா நடைபெறுகிறது. இந்தப் பிரதிஷ்டை விழாவிற்கு 1,500-1,600 சிறப்பு விருந்தினர்கள் உட்பட சுமார் 8,000 அழைப்பாளர்கள் கலந்துகொள்கின்றனர்.மேலும், பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் சர்சங்கசாலக் மோகன் பகவத் போன்ற முக்கிய பிரமுகர்கள் ராமர் கோயில் திறப்பு விழாவில் உரையாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், சஹாதத்கஞ்ச் மற்றும் நயா காட் ஆகியவற்றை இணைக்கும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட 13 கிமீ சாலைக்கு ராம் பாதை எனப் பெயரிடப்பட்டது.இந்தப் பாதையில் தற்போது பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பிர்லா தர்மஷாலா முதல் நயா காட் வரை தற்போது காவி கொடிகள், ராமர் படங்கள், ராம் தர்பார் மற்றும் வரவிருக்கும் ராமர் கோவிலின் கலைப் படங்கள் ஆகியவற்றைக் கொண்ட காவி கொடிகளை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் உள்ளனர்.இந்த நிலையில், ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் பகிரப்பட்ட படங்கள் மூலம் ராமர் கோயில் வளாகத்தின் இரவு நேர சூழலைப் பற்றிய ஒரு பார்வையை தூண்டியுள்ளது.