அயோத்தியில் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி புதன்கிழமை (ஜன.10,2024) தெரிவித்துள்ளது.இது குறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “முழுமை பெறாத கோவிலை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் திறந்து வைக்கும் நிகழ்ச்சி தேர்தல் ஆதாயத்துக்காக கொண்டு வரப்பட்டது.
இது, வெளிப்படையாகவே அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2019 உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கடைப்பிடித்து, ராமரை வணங்கும் மில்லியன் கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி மற்றும் ஸ்ரீ ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் ஆர்எஸ்எஸ்/பாஜக நிகழ்ச்சிக்கான அழைப்பை மரியாதையுடன் நிராகரித்துள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக விழாவிற்கு பல முக்கிய அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், லாலு யாதவ் மற்றும் சீதாராம் யெச்சூரி ஆகியோர் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.