பாராளுமன்ற தேர்தல் தொடர்பான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை எல்லா கட்சிகளும் தொடங்கி உள்ளது. இந்நிலையில் திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே பேச்சுவார்த்தை பிப்ரவரி 3ம் தேதி நடைபெறுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுப்பரயன் எம்.பி, முன்னாள் எம்.எல்.ஏ பழனிசாமி, மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் நேற்றைய தினத்தில் திமுக பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில் 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் கட்சியை வருகின்ற 9ம் தேதி திமுக அழைத்துள்ளது.விடுதலை சிறுத்தை கட்சியுடன் திமுக நாளை தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.