ஐ.டி.எம்.எஃப் என்பது 40 ஜவுளி உற்பத்தி நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட சர்வதேச அமைப்பாகும். இதன் தலைவராக இந்தியாவில் 4-வது மற்றும் தமிழகத்தில் இருந்து முதல் தலைவராக கே.வி. சீனிவாசன் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பின் ( ஐ.டி.எம்.எஃப்) தலைவராக கோவையைச் சேர்ந்த கே.வி. சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 4-வது தலைவர் மற்றும் தென்னிந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கபட்டுள்ள முதல் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கோவை தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் சார்பில் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள இவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தலைவர் சீனிவாசன் கூறுகையில், "30 ஆண்டுகளுக்கு முன்பு SIMA வின் குழு உறுப்பினர்களில் ஒருவராக ஆன போது ஜவுளி நிறுவனங்கள் மற்றும் தொழில் பற்றிய அறிவு வளரத் தொடங்கியது என்றார். ஐ.டி.எம்.எஃப் பற்றி பேசுகையில், இது 40 ஜவுளி உற்பத்தி நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட சர்வதேச அமைப்பாகும். இது உலகெங்கிலும் உள்ள தொழில்துறை பற்றிய மிகப்பெரிய தகவல்களையும் யோசனைகளையும் சேகரித்து, ஆய்வுகள் மற்றும் ஆய்வுகள் வடிவில் அதன் உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்கிறது.
இதன் முக்கிய நிகழ்வானது 3 நாள் வருடாந்திர மாநாடு ஆகும். இதில் மதிப்புமிக்க யோசனைகள் மற்றும் தரவுகள் பகிரப்படும் மற்றும் தொழில்துறை பற்றிய நுண்ணறிவுகளைப் பெற முடியும். அடுத்த ஆண்டு மாநாடு உஸ்பெகிஸ்தானில் நடைபெற உள்ளது. தற்போது ஜவுளி தொழிலில் இந்தியா 2-வது நாடாக உள்ளது. முதல் நாடாக சீனா உள்ளது. விரைவில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னேறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.