தமிழ்நாட்டில் ஜியோ நிறுவனம் ரூ. 35 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் வரவேற்புரை வழங்கினார். இம்மாநாட்டில் 50 நாட்டுகளைத் சேர்ந்த தொழில் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.இந்நிலையில் இந்த விழாவில் கலந்துகொள்ள முடியாத, ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி வீடியோ பதிவு மூலம் பேசி உள்ளார்.
இதில் “ தவிர்க்க முடியாத காரணங்களால் மாநாட்டில் கலந்துகொள்ள இயலவில்லை, இதனால் மனிப்பு கேட்டுகொள்கிறேன். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு, நாட்டிலேயே தொழில் நிறுவனங்களுக்கு இணக்கமான மாநிலங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால் விரைவில் டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் நம்பிக்கை எனக்கு உள்ளது.
பல ஆண்டுகளாக தமிழ்நாட்டின் வளர்ச்சியில் பெருமிதத்துடன் பங்கு பெற்றுள்ளது ரிலையன்ஸ் . ரூ. 25,000 கோடிக்கு மேல் முதலீடு செய்து மாநிலம் முழுவதும் கிட்டதட்ட 1,200 சில்லறை விற்பனைக் கடைகளைத் திறந்துள்ளோம். தமிழ்நட்டில் ரூ. 35,000 கோடிக்கு மேல் ஜியோ முதலீடு செய்துள்ளது. 35 மில்லியன் சந்தாதாரர்களிடம் டிஜிட்டல் புரட்சியின் மூலம் பலன்களை ஜியோ கொண்டு வந்துள்ளது.
தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை ஹைட்ரோஜனில் புதிய முதலீடுகளை ரியலையன்ஸ் மேற்கொள்ள உள்ளது. காலநிலை பிரச்சனையில் பூமியை காப்பாற்ற தேவையான நிலையான வளர்ச்சியை மேம்படுத்த மாநில அரசுடன் சேர்த்து பணியாற்றுவோம்” என்று தெரிவித்துள்ளது.