ஏ.ஐ தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளை நீக்குவதை விட, விரைவில் அதிக வேலைகளை உருவாக்கும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஐதராபாத்தில் பேசினார். வேலை வாய்ப்பு துறையில், தகவல் திறமையின்மையைக் சுட்டிக்காட்டிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பங்குதாரர்களின் ஒத்துழைப்பைப் பொருத்தவரையில் உதவுவதற்கு அழைப்பு விடுத்தார்.செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளை நீக்குவதை விட, விரைவில் அதிகமான வேலைகளை உருவாக்கும் என்று தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஐதராபாத்தில் தெரிவித்தார்.
தமிழ்நாடு தொழில்நுட்பத் துறையின் ஐ.சி.டி அகாடமி ஐதராபாத் நகரில் ஒருங்கிணைத்த பிரிட்ஜ் 23 ( BRIDGE 23) எனும் மனித வளம், வளர்ச்சி மற்றும் அணுகல் குறித்த கருத்தரங்கில், தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளை நீக்குவதை விட, விரைவில் அதிகமான வேலைகளை உருவாக்கும் என்று தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஐதராபாத்தில் புதன்கிழமை (20.12.2023) தெரிவித்தார்.
ஐதராபாத்தில், ஐ.சி.டி அகாடமியால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் பேசிய அமைச்சர் பி.டி.ஆர். “இனி வரும்காலத்தில், அடுத்த தலைமுறை... ஏ.ஐ தொழில்நுட்பமானது வேலைவாய்ப்புகளை நீக்குவதை விட விரைவில் அதிகமான வேலைகளை உருவாக்கும், ஏனெனில் தரவுத்தொகுப்புகளின் வகைகளிலிருந்து [தேவையானவை] நாம் இதுவரை அகற்றப்பட்டுள்ளோம்” என்று பேசினார்.
இயற்பியல் பதிவுகளை டிஜிட்டல் பதிவுகளாக மாற்றுவது, தேடுபொறிகளை இயக்குவதற்கும், அதன் விளைவாக ஏ.ஐ பயனர்களை மேம்படுத்துவதற்கும் ஒரு முன்நிபந்தனை மெதுவாக முன்னேறி வருகிறது என்பதை எடுத்துக்காட்டிய அமைச்சர் பி.டி.ஆர். “ஏ.ஐ தொழில்நுட்பத்தின் வருகைக்கு, உண்மையில் நாம் கடந்த காலத்தில் செய்ததைவிட அதிகமான மக்கள் வெவ்வேறு விஷயங்களைச் செய்ய வேண்டியிருக்கும். எவ்வாறாயினும், ஏ.ஐ. தொழில்நுட்பம் வேலையின் தன்மையை மாற்றும்” என்று அவர் கூறினார்.
மேலும், தொழில்துறைக்கு தயாராக உள்ள நிறுவனங்களின் நிலையான போக்கை உறுதிசெய்ய பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். உலகின் மனித வள மூலதனமாக இந்தியா உருவெடுத்து வருவதாகவும், அடுத்த தலைமுறைக்கு உலக அளவில் தொழிலாளர் சந்தையின் அதிகார மையமாக திகழ்வதாகவும் கூறிய அமைச்சர் பி.டி.ஆர், இது சீனாவின் 10% வளர்ச்சியின் இரண்டு தசாப்தங்களை பிரதிபலிக்கும் வாய்ப்பை வழங்குவது உட்பட நம் நாட்டிற்கு பல வழிகளில் நன்மை பயக்கும் என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் பி.டி.ஆர். “நமக்கு சில கட்டமைப்பு சிக்கல்கள் உள்ளன. முதலாவது வேலைவாய்ப்பு சந்தையில் அதிக அளவில் காணப்படும் தகவல் திறமையின்மை, படித்து முடித்துவிட்டு வெளிவரும் பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கவில்லை, எப்போதும் தொழில்நுட்பத் துறை உட்பட பல தொழில்களில் திறமையான தொழிலாளர்களின் உண்மையான பற்றாக்குறை உள்ளது” என்று கூறினார். மேலும், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற பங்குதாரர்களிடையே திறமையின்மையை அகற்றவும், வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரவும், விளைவுகளை மேம்படுத்தவும் ஒரு நல்ல திறமையான தொடர்புக்கு அழைப்பு விடுத்தார்.