தங்கம் விலை இன்றும் அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.46,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் போர் காரணமாக கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 480 அதிகரித்தது. ஆனால், மறுநாள் செவ்வாய்க்கிழமை தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 1000 சரிந்தது. இதேபோல், 2வது நாளாக புதன்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 அதிரடியாக குறைந்தது. ஆனால், நேற்று வியாழக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு சவரன் ரூ.46,560-க்கும், கிராமுக்கு ரூ. 5 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ. 5,820-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் அதிகரித்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.46,680-க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,835-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,366-க்கும், ஒரு சவரன் ரூ. 50,928-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையில் எந்த மாற்றமுமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.80-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000-க்கும் விற்பனையாகிறது.