மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான காரமடை,சிறுமுகை, வெள்ளியங்காடு, தோலம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து கன மழை பெய்தது.
இதன் காரணமாக தாழ்வான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது.மேலும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக காரமடை அருகே உள்ள திம்மம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் மழை நீர் புகுந்தது.
இதனால் அங்கிருந்த சேர்,டேபிள்,புத்தகங்கள் உள்ளிட்டவை மழை நீரில் மிதந்தன.மேலும், அந்த கட்டிடத்தில் துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுவதால் இன்றைய தினம் அங்கு வகுப்புகள் நடத்தப்படாமல் மற்றொரு புறம் உள்ள கட்டிடத்தில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். திம்மம்பாளையம் அரசு பள்ளியில் புகுந்த மழை நீரில் மிதக்கும் சேர், டேபிள்கள்.