நெட்ஃபிலிக்ஸ், டிஸ்னி + ஹாட் ஸ்டார் சந்தா உடன் வரும் ஏர்டெல்லின் ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்து இங்கு பார்ப்போம். ஏர்டெல் இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப ப்ரீபெய்ட், போஸ்ட் பெய்ட் திட்டங்களை கொண்டுள்ளது. அதோடு மக்களின் பொழுதுபோக்கு அம்சத்திற்காக ஓ.டி.டி தளங்களின் சந்தாவையும் கொண்டுள்ளது. அந்த வகையில் ஏர்டெல் நெட்ஃபிலிக்ஸ், டிஸ்னி + ஹாட் ஸ்டார் சந்தா கொண்டுள்ள ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்து இங்கு பார்ப்போம். இந்த திட்டங்களில் ரீசார்ஜ் செய்தால் போதுமானது, குறிப்பிட்ட நாட்களுக்கு ஓ.டி.டி சந்தா பெறலாம். ஓ.டி.டி தளங்களுக்கு தனியாக பணம் செலுத்தி பார்க்கத் தேவையில்லை. ஏர்டெல் 2 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நெட்ஃபிலிக்ஸ், டிஸ்னி + ஹாட் ஸ்டார் சந்தா வழங்குகிறது.
பார்தி ஏர்டெல்லின் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ்எம்எஸ்/நாள் வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. அதோடு இந்த திட்டத்தில் நெட்ஃபிலிக்ஸ் Basic சந்தா, அப்பல்லோ 24|7 சர்க்கிள், இலவச Hellotunes, Wynk Music மற்றும் அன்லிமிடெட் 5ஜி ஆகியவை பெறலாம்.
பார்தி ஏர்டெல்லின் ரூ.869 ப்ரீபெய்ட் திட்டமானது தினசரி 2ஜிபி டேட்டா உடன் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் அன்லிமிடெட் வாய்ஸ் கால் ஆகியவற்றுடன் வருகிறது. இந்த திட்டத்தில், பயனர்கள் 3 மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா பெறலாம். இந்த மொபைல் சந்தாவின் விலை ரூ. 149 ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் இது இலவசமாக வழங்கப்படுகிறது. அதோடு கூடுதல் நன்மைகளாக அன்லிமிடெட் 5ஜி, அப்பல்லோ 24|7 சர்க்கிள், இலவச Hellotunes, Wynk ஆகியவை பெறலாம்.