மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை தனக்கு கொடுத்தால் தான் குஜராத் அணியை விட்டு வருவேன் என மும்பை நிர்வாகத்திடம் ஹர்திக் பாண்டியா நிபந்தனை விதித்துள்ளார். 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2024) நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா விடுவிக்கப்பட்டுள்ளார். அந்த அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், உலகக் கோப்பை தொடர் தொடங்கிய போதே, வரவிருக்கும் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என ரோகித் சர்மாவுக்கு என்று தெரிவிக்கப்பட்டது என்றும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை தனக்கு கொடுத்தால் தான் குஜராத் அணியை விட்டு வருவேன் என மும்பை அணி நிர்வாகத்திடம் ஹர்திக் நிபந்தனை விதித்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பையின் தொடக்கத்தில், மும்பை அணியின் எதிர்கால திட்டம் குறித்து ரோகி புரிந்துகொள்ள செய்யப்பட்டார் என்பதையும், மேலும், தொடர் கூட்டங்களில் கேப்டன்சியில் உடனடி மாற்றம் தேவை என அவருக்கு தெரிவிக்கப்பட்டு, வரும் சீசனில் ஹர்திக் பாண்டியாவின் கீழ் விளையாடும் திட்டத்திற்கு அவர் உடன்பட்டார் என்பதையும், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் புரிந்துகொள்கிறது.
ஹர்திக் பாண்டியா முந்தை 2 சீசனிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த நிலையில், அவரை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேட் முறையில் ரூ.15 கோடிக்கு வாங்கியது. தான் மீண்டும் மும்பை அணியுடன் இணைய வேண்டுமானால், அவர் தான் அணியை வழிநடத்துவார் என்று ஹர்திக் பாண்டியா அணி நிர்வாகத்திடம் தெளிவுபடுத்தியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்துள்ளது.
நீண்ட ஆலோசனைக்குப் பிறகு மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவின் விருப்பத்திற்கு ஒப்புக்கொண்டது. பின்னர் உலகக் கோப்பையின் போது ரோகித் சர்மாவிடம் இது குறித்து தெரிவித்தது. அவர் அதற்குள் அணியின் எதிர்காலத்தை முடிவு செய்யும் உரிமையை அணி நிர்வாகத்திடமே விட்டுவிட்டார் என்பதையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்துள்ளது.