அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் 4-வது சுற்றை எட்டிய சானியா மிர்சா கிரான்ஸ்லாம் போட்டிகளில் 4-வது சுற்றை எட்டிய முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையை பெற்றார். டென்னிஸ் உலகில் இந்தியாவை பெருமைபட வைத்த முன்னணி வீராங்கனை சானியா மிர்சாவின் பிறந்த நாள் இன்று (நவம்பர் 15). டென்னிஸ் உலகில் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் 6 முறை பட்டம் வென்றுள்ள சானியா மிர்சா, இந்தியாவின் மதிப்புமிக்க விளையாட்டு நட்சத்திரங்களில் ஒருவராக இருகிறார். அதேபோல ஒற்றையர் பிரிவில் தான் விளையாட தொடங்கிய 2003-ல் இருந்து ஓய்வு பெறும் வரை (2013) முதலிடத்தில் இருந்தவர்.
பிறப்பு – டென்னிஸ் வாழ்க்கையின் தொடக்கம்
1986-ம் ஆண்டு நவம்பர் 15-ந் தேதி மும்பையில் பிறந்தவர் சானியா மிர்சா. இவரது தந்தை ஒரு விளையாட்டு பத்திரிக்கையாளர். மும்பையில் பிறந்திருந்தாலும் சானியா ஹைதராபாத்தில் வளர்ந்துள்ளார். தனது 6-வது வயதில் டென்னிஸ் விளையாட தொடங்கிய சானியாவுக்கு அவரது தந்தை மற்றும் ரோஜர் ஆண்டர்சன் ஆகிய இருவரும் பயிற்சி அளித்துள்ளனர். தொடர்ந்து 2003-ம் ஆண்டு சானியா மிர்சா தனது சர்வதேச டென்னிஸ் பயணத்தை தொடங்கினார்.
ஜூனியர் பிரிவில் 10 ஒற்றையர் பிரிவு பட்டங்கள், மற்றும் 13 இரட்டையர் பிரிவு பட்டங்களை வென்றுள்ள சானியா, 2002-ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்திய விளையாட்டு போட்டியில் தனது 16 வயதில் களமிறஙங்கிய சானியா மிர்சா, தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இதன் காரணமாக 2003-ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட வைல்ட் கார்டு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த போட்டியில் கடினமான பிரிவில் இடம் பெற்றிருந்த சானியா, தோல்வியை சந்தித்தார், அடுத்து கத்தார் லேடீஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் தகுதிச்சுற்று ஆட்டத்திலேயே தோல்வியடைந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஃபெட் கோப்பை தொடரில் 3 போட்டிகளை வென்ற சானியா, 2002-ம் ஆண்டு பூட்டானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸூடன் இணைந்து வெண்கலப்பதக்கம் வென்றார்.
உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப்
2003-ம் ஆண்டு இந்தியாவின் ஹைதாபாத்தில் நடைபெற்ற ஆப்ரோ – ஆசிய விளையாட்டு போட்டியில் 4 தங்கப்பதக்கங்களை வென்றார். 2003-ம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இரட்டையர் பிரிவில் ரஷ்ய வீராங்கனை அலீசா க்ளோபனேவுடன் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். அதற்கு முன்னதாக 2002-ம் ஆண்டு நடைபெற்ற யு.எஸ்.ஓபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதி வரை வென்ற சானியா, 2003-ம் ஆண்டு அரையிறுதி வரை சென்று வெளியேறினார்.
2004-ம் ஆண்டு ஐ.டி.எஃப் தொடரில் 6 பதக்கங்களை வென்ற சானியா மிர்சா 2005-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பின்னை பெற்றார். இதில் முதல் 2 சுற்றுகளில் வெற்றி பெற்ற சானியா, அடுத்த சுற்றில் சாம்பியன் செரீனா வில்லியம்ஸிடம் தோல்வியடைந்தார். அதன்பிறகு ஹைதராபாத் ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடிய சானியா இறுதிப்போட்டியில், 9-ம் நிலை வீராங்கனையாக இருந்த அலோகா பெண்டரான்கோ என்பவரை தோற்கடித்தார்.இந்த வெற்றியின் மூலம் உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் பெண்மணி என்ற சாதனை படைத்தார் சானியா மிர்சா. தொடர்ந்து அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் 4-வது சுற்றை எட்டிய சானியா மிர்சா கிரான்ஸ்லாம் போட்டிகளில் 4-வது சுற்றை எட்டிய முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.
காயம் காரணமாக விலகல்
2008-ம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டியில், ஒற்றையர் பிரிவில் மணிக்கட்டு காயம் காரணமாக களமிறங்காத சானியா, இரட்டையர் பிரிவில் அனிதா ராவுடன் வாக்ஓவர் பெற்றார். இந்த ஜோடி 2-வது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியது. 2008-ம் ஆண்டு முழுவதும் மணிக்கட்டு காயத்தால் அவதிப்பட்ட சானியா, பிரெஞ்ச் மற்றும் யு.எஸ்.ஓபன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகினார். 2009-ம் ஆண்டு ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் ரீ-என்டரி ஆன சானியா, முதல் சுற்று போட்டியில், மார்டா டோமச்சோவ்ஸ்காவுக்கு எதிராக வெற்றி பெற்றார்.
2-வது சுற்றில் 10-ம் நிலை வீராங்கனையான நாடியா பெட்ரோவாவிடம் தோல்வியடைந்த சானியா தொடரில் இருந்து வெளியேறினார். அந்த தொடரில் இரட்டையர் பிரிவில், தோல்வியடைந்த சானியா, கலப்பு இரட்டையர் பிரிவில், இந்திய டென்னிஸ் நட்சத்திரம் மகேஷ் பூபதியுடன் இணைந்து சாம்பியன் பட்டத்தை வென்றார். அதன்பிறகு பல தொடர்களில் ஒற்றையர் பிரிவு, இரட்டையர், கலப்பு இரட்டையர் உள்ளிட்ட பிரிவுகளில் பல வெற்றிகளை குவித்த சானியா சில சாம்பியன் பட்டங்களையும் வென்றார்,
2010-12 வரை கிராண்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்ற சானியா, முதல் மற்றும் 2-வது சுற்றிகளில் வெளியேறிய நிலையில், மீண்டும் மணிக்கட்டு காயம் காரணமாக மியாமி ஓபன், இந்திய வேல்ஸ் ஓபன், .பேமிலி சர்கிள் உள்ளிட்ட டென்னிஸ் தொடர்களை தவறவிட்டார். இந்த காலக்கட்டத்தில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியையும் தவறவிட்ட சானியா, 2010-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்று ஒற்றையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார்.
டென்னிஸில் இருந்து ஓய்வு
சானியா மிர்சாகடந்த ஜனவரி மாதம் தூபாய் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடிய சானியா இதுவே தனது கடைசி போட்டி என்று அறிவித்திருந்தார். தனது கடைசி போட்டியில், அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ்ஸூடன் சானியா இணைந்து விளையாடி இருந்தார். ஒற்றையர் பிரிவில், அமெரிக்கா, பிரெஞ்ச், விம்பிள்டன் மற்றும் யூ.எஸ் ஓபன் உள்ளிட்ட 4 தொடர்களிலும் விளையாடியுள்ள சானியா மிர்சா சுற்று போட்டிகளிலேயே வெளியேறியுள்ளார்.
இதில் அதிகபட்சமாக, 2005-ம் ஆண்டு யூ.எஸ் ஓபன் போட்டியில் 4-வது சுற்று, ஆஸ்திரேலிய ஓப்பனில் இருமுறை 3-வது சுற்றுக்கு முன்னேறியதே கிராண்ஸ்லாம் போட்டிகளில் சானியாவின் அதிகபட்ச முன்னேற்றமாகும். இரட்டையர் பிரிவில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் 2016-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றுள்ள சானியா, 2012-ம் ஆண்டு அரையிறுதி, 2014-ம் ஆண்டு காலிறுதி வரை முன்னேறியுள்ளார். பிரெஞ்ச் ஓபனில் 2012-ம் ஆண்டு இறுதிப்போட்டிக்குள் நுழைந்து தோல்வியை சந்தித்துள்ளார். விம்பிள்டன் போட்டியில் 2008-ல் காலிறுதி, 2011-ல் அரையிறுதி வரை சென்ற சானியா ஜோடி, 2015-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. யூ.எஸ் ஓபன் போட்டியிலும் அதே ஆண்டு சாமபியன் பட்டம் வென்றுள்ளது.
சாதனை விபரங்கள்
உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இரட்டையர் பிரிவில், 2014-2015 என இரு ஆண்டுகள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ள சானியா ஜோடி, ஒலிம்பிக் போட்டியில் அதிகபட்சமாக 2-வது சுற்றுவரை முன்னேறியுள்ளது. தொடர்ந்து 2011-15 ஆகிய ஆண்டுகளில் இந்திய வேல்ஸ் ஒபன் கோப்பை, 2015-ம் ஆண்டு மியாமி கோப்பை, 2016 இத்தாலி ஓபன், சின்சினாட்டி ஓபன், 2013- ஆகிய ஆண்டுகளில் பான் ஸ்பெசிபிக் மற்றும் சீனா ஓபன் ஆகிய கோப்பைகளை இரட்டையர் பிரிவில் வென்றுள்ளார்.
கலப்பு இரட்டையர் பிரிவில், 2009-ம் ஆண்டு ஆஸ்திரேலியா ஓபன் கோப்பை வென்ற சானியா, 2012-ல் பிரெஞ்ச் ஓபன், 2014-ல யூஎஸ் ஓபன் கோப்பையை வென்றுள்ளார். கோடைகால ஒலிம்பிக் போட்டியில் கடந்த 2016-ம் ஆண்டு 4-வது இடம் பிடித்ததே சானியா ஜோடியின் உயர்ந்த தர நிலையாகும். 2022-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஓபன் போட்டியில் காலிறுதி சுற்றிலும், விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் அரையிறுதி சுற்றிலும் சானியா ஜோடி தோல்வியை சந்தித்து.
ஒற்றையர் பிரிவில், 2004-ம் ஆண்டு ஹைதராபாத் ஓபன், 2006-ம் ஆண்டு பெங்களூர் ஓபன் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற சானியா, 2006-ல் சன்ஃபீஸ்ட் ஓபன், 2007-ல் க்ராண்ட் பிரிக்ஸ் கோப்பை, சின்சினாட்டி ஓபன், சிலிக்கான் வெள்ளி க்ளாசிக், கனெக்ட் கட் ஓபன், 2009-ல் அமிலியா ஐலாண்ட் ஓபன், 2009-ல் குணாசாயோ ஓபன், 2011 வாஷிங்டன் ஓபன், 2012 பட்டாயா ஓபன், 2014-ல் எஸ்ராயில் ஓபன் உள்ளிட்ட கோப்பைகளை வென்றுள்ளார்.
விருதுகள் – தனிப்பட்ட வாழ்க்கை
2010-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்ட சானியா மிர்சான பாகிஸ்தானுக்கு மருமகளாக இருந்தாலும், இந்தியாவுக்காக டென்னிஸ் விளையாடி வந்தார். இந்த தம்பதிக்கு தற்போது ஒரு மகன் உள்ளார். சானியா மிர்சா தற்போது ஹைதராபாத்தில் டென்னிஸ் அகாடமியை தொடங்கி நடத்தி வருகிறார். தெற்காசியாவுக்கான ஐ.நா.வின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ள சானியா, நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்ட முதல் தெற்காசிய பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
2004-ம் ஆண்டு அர்ஜூனா விருது பெற்ற சானியா 2006-ம் ஆண்டு பத்மஸ்ரீ, 2015-ம் ஆண்டு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது, 2016-ம் ஆண்டு பத்ம பூஷன் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். டைம்ஸ் இதழின் 2016-ம் ஆண்டு உலகின் சிறந்த செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் சானியா மிர்சா இடம்பெற்றுள்ளார். டென்னிஸ் தவிர்த்து நீச்சல் மற்றும் கிரக்கெட் போட்டிகளில் ஆர்வம் கொண்ட சானியா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.