அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை.இந்நிலையில் தற்போது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில், நவம்பர் 30ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
சென்னை மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிலையங்கள் ஆகிய இடங்களிலும், அமைச்சரின் வீட்டு வாசலில் இருந்து கார்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். துணை ராணுவப்படையினர் சோதனை நடைபெற்ற இடங்களில் குவிக்கப்பட்டனர்.அப்போது சென்னையில், அமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற 13 மணி நேரம் சோதனையை தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரிடம் 7 மணி நேரம் தொடர் விசாரணை நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்குத்தான் பொன்முடி அங்கிருந்து வீட்டுக் சென்றார்.