ஏ.பி.வி.பி அமைப்பைச்சேர்ந்த இருவர், உயர்நீதிமன்ற நீதிபதியின் காரை திருடிச் சென்று, உயிருக்கு போராடிய பல்கலைக்கழத்தின் துணை வேந்தரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இவர்கள் இருவருக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. குவாலியர் பகுதி ஏ.பி.வி.பி செயலாளர் ஹிமான்ஷு சொரிட்ரியா ( 22 வயது ) , துணை செயலாளர் சுக்ரித் ஷர்மா ( 24 வயது), டிசம்பர் 11ம் தேதி குவாலியர் ரயில் நிலையத்தில் இறங்கி உள்ளனர். காலை 3.45 மணிக்கு ரஞ்சீத் சிங் என்பவருக்கு உடல் நிலை சரியில்லாததால், ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர்.
ஆம்புலன்ஸ் வந்தபோது, அருகில் உள்ள அரசு அதிகாரியின் காருக்கு காவலில் உள்ள காவலிரிடம், காரின் சாவியை பலவந்தமாக பெற்று, ரஞ்சீத் சிங்கை மருத்துவமனைக்கு காரில் அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக கான்ஸ்டபிள் கொடுத்த புகாரில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ரஞ்சீத் சிங், உத்தரபிரதேசத்தின் ஜான்சி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் துணை வேந்தராக உள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவர் இதயம் செயலிழந்ததால் மரணமடைந்தார்.
இந்நிலையில் இவரும் ஜாமீன் பெற உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி சஞ்சய் கோயல் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளார். “ அரசு அதிகாரியின் காரை, திருடிச் செல்வது சட்டப்படி குற்றமாகும். ஒருவருக்கு உதவி செய்ய இந்த சம்பவம் நடைபெற்றாலும், உதவியை நாம் வலுகட்டாயமாக கேட்ட கூடாது. உதவி கேட்பதிலும் பணிவு தேவை” என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய பிரதேசத்தின் தலைமை நீதிபதியிடம் பேசியுள்ளார். ” தவறு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த செயல் நடைபெறவில்லை. மனிதாபிமான அடிப்படையில் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும். இது ஒரு குற்றம்தான் என்றாலும், மனிப்பு கொடுக்க முடியும் “ என்று அவர் தெரிவித்துள்ளார்.