வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜிலும் 'வியூ ஒன்ஸ்' ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எப்படி பயன்படுத்துவது என்று இங்கு பார்ப்போம். வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதுப் புது அம்சங்களை நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் நிறுவனம் அண்மையில் 'வியூ ஒன்ஸ்' என்ற அம்சம் அறிமுகம் செய்தது.
அதாவது, மற்றவருக்கு போட்டோ அனுப்பும் போது இந்த ஆப்ஷன் கொடுத்தால் தகவல் பெறுபவர் அந்த போட்டோவை ஒரு முறை ஓபன் செய்து பார்த்த உடன் அந்த போட்டோ டெலிட் ஆகி விடும். அந்த வகையில் தற்போது வாய்ஸ் மெசேஜிலும் அந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஓ.டி.பி, sensitive details பகிர்தல் போன்ற தருணங்களில் இந்த அம்சம் மிகவும் உதவியாக இருக்கும்.
வாய்ஸ் மெசேஜில் 'வியூ ஒன்ஸ்' பயன்படுத்துவது எப்படி?
1. வாட்ஸ்அப் ஓபன் செய்து chat பக்கம் செல்லவும்.
2. மைக்ரோபோன் ஐகான் கிளிக் செய்து வாய்ஸ் மெசேஜ் டெக்கார்டு செய்யவும்.
3. 'சர்க்கிள் வடிவத்தில் உள்ளே 1 என்ற எண்' இருக்கும் பட்டனை கிளிக் செய்து send பட்டன் கொடுக்கவும்.
4. மெசேஜை ரிசீவர் ஓபன் செய்து கேட்டவுடன் அந்த மெசேஜ் டெலிட் செய்யப்படும்.
எனினும் ரிசீவர் மெசேஜை ஓபன் செய்யாமல், ஆடியோவை கேட்டகாமல் இருந்தால் அந்த மெசேஜ் 14 நாட்கள் இருக்கும். அதன் பின் மெசேஜ் தானாகவே டெலிட் ஆகி விடும்.