சென்னையில் கன மழையால் சேதமடைந்த வாகனங்களை சரி செய்ய முடியாமல் பலர் தவித்து வருகின்றனர்.மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த 3, 4 ஆம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இதனால், பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
பல வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததன் காரணமாக அங்கு வைக்கப்பட்டிருந்த டிவி, ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மழை நீரினால் சேதமடைந்துள்ளன. டூவிலர், கார் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கி பழுதாகி உள்ளன. பல வாகனங்கள் நீருக்குள் முழுமையாக மூழ்கிய நிலையில் இன்னும் மீட்கப்படாமல் உள்ளன. மெக்கானிக் கடைகளில் ஒரே நேரத்தில் பலரும் பழுதான வாகனங்களுடன் வருவதால் அங்கு கூட்டம் மோதுகிறது.
இந்நிலையில், வெள்ளத்தில் பழுதான வாகனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை கூலி எதுவும் வாங்காமல் பழுது பார்த்து தரப்படும் என டி.வி.எஸ். நிறுவனம் அறிவித்துள்ளது.18 ஆம் தேதி வரை இந்த சலுகை நடைமுறையில் இருக்கும். இதற்காக வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்த வாகனங்களை சர்வீஸ் செண்டருக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக வாகனங்களை ஸ்டார்ட் செய்ய வேண்டாம். இன்சூரன்ஸ் தொடர்பு இல்லாத சேவைகள், எலெக்ட்ரிக் வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் உதவி, டோவிங் வசதி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்குவதாக டிவிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
.