ப்ளிப்கார்ட் இயர் எண்ட் விற்பனையில் சாம்சங் கேலக்சி எஃப் 14, 5ஜி ஸ்மார்ட் போனுக்கு தள்ளுபடி வழங்கியுள்ளது. 2023-ல் வாங்க சிறந்த 5ஜி பட்ஜெட் ஸ்மார்ட் போன் இதுவாகும். சாம்சங் கேலக்சி எஃப் 14, 5ஜி ஸ்மார்ட் போன் தற்போது குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த போன் வாங்க பல்வேறு சிறந்த காரணங்கள் உள்ளன. பட்ஜெட் விலையில் 5ஜி போன் வாங்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த ஆஃபராக இருக்கும்.
ப்ளிப்கார்ட் இயர் எண்ட் விற்பனையில் சாம்சங் கேலக்சி எஃப் 14, ரூ.11,490-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதோடு வங்கிச் சலுகைகளை சேர்க்கும் போது இதை நீங்கள் ரூ.10,000 விலையில் வாங்க முடியும். சாம்சங்-ன் சிறந்த பட்ஜெட் போனாக இது இருக்கும். அதோடு குறைந்த விலையில் சாம்சங் ப்ராண்ட் 5ஜி போனைப் பெற முடியும். இந்த பட்ஜெட் சாம்சங் போன் இந்தியாவில் ரூ.12,990க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது தற்போது கிட்டத்தட்ட ரூ.1,500 பிளாட் தள்ளுபடி பெறுகிறது. அதோடு கூடுதலாக 10 சதவீதம் வரை வங்கி சலுகையை நீங்கள் பெற முடியும்.
2023-ல் சிறந்த ஸ்மார்ட் போனா?
நிச்சயமாக. Samsung Galaxy F14 ஸ்மார்ட்போனை வாங்குவதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த பட்ஜெட் ஃபோனைப் பரிந்துரைப்பதற்கான முதல் காரணங்களில் ஒன்று இது 5ஜி போனாகும். அடுத்து சாம்சங் ப்ராண்ட் மற்றும் நல்ல performance கொண்டுள்ளது. அடுத்ததாக இதோட பேட்டரி லைவ். Samsung Galaxy F14 5ஜி போன் சுமார் 6000mAh பேட்டரி வைவ் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 2 நாட்கள் வரை பேட்டரி லைவ் நீடிக்கும். கேமரா குவாலிட்டியும் நன்றாக உள்ளன. இருப்பினும், தற்போது வரும் சாம்சங் போன்களில் இருக்கும் ஒரு பிரச்சனை, போனுடன் சார்ஜர் வழங்கப்படாது. நீங்கள் பழைய சாம்சங் சார்ஜர் வைத்திருந்தீர்கள் என்றால் இந்த செலவை தவிர்த்து அதையே பயன்படுத்தலாம்.