தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நடலக்குறைவால் சில ஆண்டுகள் வீட்டிலேயே இருந்து வருகிறார்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், தேவைப்படும் நேரத்தில் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவருக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவு ஏற்பட்டதால் கடந்த மாதம் 18ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தார்.இந்நிலையில் 21 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு , அவர் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் சிகிச்சை பெற்றுவந்த மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விஜயகந்த் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.