சென்னை இன்னும் திட்டமிடப்படாத நகரமாக உள்ளது எனவும் சிங்கார சென்னை என்று எல்லாம் சொன்னார்கள், ஆனால், அது அப்படியே உள்ளது என்றும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் விமர்சனம் செய்தார். கோவையில் நேற்று (டிச.9) மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"மழை வந்தால் வெள்ளம் வரும் என அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அதை நாம் எப்படி பாதுகாப்பது என்று முக்கியம். இந்த தண்ணீர் ஒரே நாளில் கடலில் சென்று கலந்து விடும்.
ஆனால் இதை செய்வதற்கு நம்மிடம் திட்டமிடல் இல்லை. தண்ணீரை மற்ற இடம் அல்லது விவசாயத்திற்கு பயன்படும் படி செய்ய திட்டம் இல்லை. மழை நீரை தேக்கி பயன்படுத்த திட்டம் இல்லை. இன்னும் சென்னை முறையான வடிகால் வசதி இல்லை. சென்னை திட்டமிடப்படாத நகரமாக உள்ளது. இதை மாற்ற வேண்டும். சிங்கார என்று எல்லாம் சொன்னார்கள், ஆனால், அது அப்படியே உள்ளது" என்று அவர் விமர்சனம் செய்தார்.