செப்டம்பர் 30, 2023 இல் முடிவடைந்த காலாண்டில், வங்கியின் நிகர லாபம் ரூ. 625 கோடியாக இருந்தது, இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.501 கோடியிலிருந்து 24.75 சதவீதம் அதிகமாகும். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை 30 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தி உள்ளது. இத நவ.15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எஃப்.டி வட்டி விகிதம்:
ஐ.ஓ.பி. வங்கி 7-29 நாள்களுக்குள் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு வங்கி 4.00% வட்டியைத் தொடர்ந்து வழங்கும்.அதே நேரத்தில் 30-90 நாள்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 4.25% வட்டி கிடைக்கும். மேலும், 91-179 நாள்கள் டெபாசிட் காலத்திற்கு 4.50% வட்டி விகிதமும், 180-269 நாள்களுக்கு, வங்கி தொடர்ந்து 4.95% வட்டி விகிதமும் வழங்கும்.
ஐ.ஓ.பி. வட்டி விகிதங்கள்:
தொடர்ந்து, 270 நாள்களில் இருந்து ஒரு வருடத்தில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 5.35% ஆகவும், ஒரு வருடம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை (444 நாள்கள் திட்டம் தவிர) முதிர்ச்சியடையும் டெபாசிட்கள் 6.80% வட்டி வருவாயை வழங்கும்.இது முன்பு முன்பு 6.50% ஆக காணப்பட்டது. மேலும், இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் எஃப்.டி.க்களுக்கு 6.80% வட்டி விகிதத்தைத் தொடர்ந்து வழங்கும்.