பாஜகவின் தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை பொறுப்பாளர் அமித் மாளவியா, நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தியபோது கைது செய்யப்பட்ட நீலம் ஆசாத் தீவிர காங்கிரஸ் ஆதரவாளர் என்று கூறினார். நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் தொடர்பாக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தாக்குதல் நடத்திய நிலையில், ஊடுருவல் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி ஆதரவாளர் என்று கூறி ஆளும் பாஜக பதிலடி கொடுத்தது.
பாஜகவின் தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை பொறுப்பாளர் அமித் மாளவியா, நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தியபோது கைது செய்யப்பட்ட நீலம் ஆசாத் தீவிர காங்கிரஸ் ஆதரவாளர் என்று கூறினார். ’சட்ட பரிவர்த்தன் அல்லது ஆட்சி மாற்றம் என்பது காங்கிரஸ் தலைவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் சொற்றொடர். இன்று பாராளுமன்ற பாதுகாப்பை மீறிய பெண் நீலம் ஆசாத்தை பாருங்கள். அவர் தீவிர காங்கிரஸ்/ இந்தியா கூட்டணி ஆதரவாளர். அவர் ஒரு அந்தோலஞ்சீவி (கலகம் செய்பவர்), பல போராட்டங்களில் காணப்பட்டவர்’, என்று பல்வேறு போராட்டங்களில் ஆசாத்தின் வீடியோ கிளிப் மற்றும் புகைப்படங்களுடன் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவர்களை அனுப்பியது யார் என்பதுதான் கேள்வி? பாஜக எம்.பி.யிடமிருந்து பார்லிமென்ட் பாஸ் பெற மைசூரில் இருந்து ஒருவரை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? அஜ்மல் கசாப்பும் மக்களை தவறாக வழிநடத்த கலவா (கைகளில் கட்டும் மஞ்சள் சிவப்பு கயிறு) அணிந்திருந்தார். இதுவும் இதேபோன்ற தந்திரம்தான்.நமது ஜனநாயகத்தின் மிக உயர்ந்த அமைப்பான நாடாளுமன்றத்தை கூட கெடுக்காமல், எதிர்க்கட்சிகள் ஒன்றும் செய்யாது என்பதை நினைவில் கொள்ளுங்கள், என்று அவர் மேலும் கூறினார்.