பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) பயனர்களுக்கு பல ஓ.டி.டி சந்தா திட்டங்களை வழங்குகிறது. அதை ஃபைபர் பிராட்பேண்ட் சேவையில் கூடுதல் இணைப்பாக வாங்கலாம். வாடிக்கையாளர்கள் இதற்கு மாதம் ரூ.249 கூடுதலாக செலுத்திப் பெறலாம். பிராட்பேண்ட் இணைப்புடன் OTT பேக்கை கூடுதல் இணைப்பாகப் பெறலாம். இருப்பினும் இதைவிட குறைவான செலவிலும் திட்டங்களைப் பெறலாம்.
பி.எஸ்.என்.எல் சினிமா பிளஸ் ஓ.டி.டி திட்டங்கள்
பிஎஸ்என்எல் 3 சினிமா பிளஸ் திட்டங்களைக் கொண்டுள்ளது. இந்த திட்டங்களின் விலை ரூ.49, ரூ.199 மற்றும் ரூ.249 ஆகும். பட்டியலில் உள்ள மலிவான திட்டம் ரூ.49 திட்டம் (ஸ்டார்ட்டர் பேக்) ஆகும். இது பல OTT நன்மைகளுடன் வருகிறது. இந்த நன்மைகள் Lionsgate, ShemarooMe, Hungama மற்றும் EpicON.அடுத்து முழு பேக் திட்டத்தில் ZEE5, SonyLIV, YuppTV மற்றும் Disney+ Hotstar ஓ.டி.டி சந்தா வழங்குகிறது.இந்த ஃபுல் பேக்கின் விலை ரூ. 199. பட்டியலில் கடைசியாக இருப்பது பிரீமியம் பேக். இந்த பிரீமியம் பேக் விலை ரூ.249. இதில் ZEE5 பிரீமியம், SonyLIV பிரீமியம், YuppTV, Shemaroo, Hungama, Lionsgate மற்றும் Disney+ Hotstar ஆகியவற்றிற்கான சந்தா வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எலில்லிருந்து ஃபைபர் இணைப்பு வாங்கினால் மட்டுமே BSNL வழங்கும் இந்த சினிமா பிளஸ் திட்டங்கள் உள்ளன. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து OTT திட்டங்களுக்கான சந்தாக்கள் உங்கள் ஃபைபர் இணைப்பின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் மட்டுமே செயல்படுத்தப்படும்.