தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப் படி உயர்வை வழங்க வேண்டும்; புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்க தமிழ்நாடு அரசு செவிசாய்க்காத நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் ஜன.9ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இந்த நிலையில் பொங்கல் பண்டிகை காரணமாக அந்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினார்கள்.
இதற்கிடையில் பொங்கல் பண்டிகை முடிந்து இன்று (ஜன.19,2024) மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது நடவடி்கை எடுக்கப்படாது என உறுதியளிக்கப்பட்டது.எனினும் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து, போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் மீண்டும் பேச்சுவார்த்தை பிப்.7ஆம் தேதி நடக்கிறது.