தமிழ் கவிஞர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி சுப்பிரமணிய பாரதியார் பற்றிய 26 எபிசோடுகள் கொண்ட தமிழ் ஆவண நாடகம் ஜனவரி 21 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9.30 மணிக்கு தூர்தர்ஷன் பொதிகையில் மகாகவி பாரதி என்ற தலைப்பில் ஒளிபரப்பாக உள்ளது.
இது குறித்து தி இந்து வெளியிட்டுள்ள செய்தியில், நவீன தமிழ் இலக்கிய பாணியின் முன்னோடியான சுப்பிரமணிய பாரதியாரின் வாழ்க்கை மற்றும் படைப்புகளை பற்றி பலரும் அறிந்துகொள்ளும் வகையிலும், அவரின் படைப்புகளை கொண்டாடும் வகையிலும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆவண-நாடகத்தை லதா கிருஷ்ணா திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், இந்த ஆவணப்படத்தை இயக்குவது ஒரு கண்கவர் அனுபவம். அந்தக் காலத்தை காட்சிப்படுத்துவது சவாலாக இருந்தது என்று கூறியுள்ளார். அதேபோல், அசோசியேட்ஸின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணசாமி கூறுகையில், “பாரதியரின் வாழ்க்கையையும் படைப்புகளையும் இளைய தலைமுறையினர் பாராட்ட உதவும் ஆவண நாடகமாக நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.